(கியாஸ் ஷாபி)
திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் திருகோணமலை பிராந்திய போதை பொருள் தடுப்பு பிரிவால் நேற்று(28) மாலை கைது செய்யப்பட்டு, தம்பலாகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைதான நபர்களிடம் இருந்து 25 கிராம் நிறை கொண்ட ஹெரோயின் பொதி ஒன்று கைப்பற்றப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இந்த நபர் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

Post a Comment