https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 மாவட்ட செயலகங்களில் கடவுச்சீட்டு விநியோகம்..

மாவட்ட செயலகங்களில் கடவுச்சீட்டு விநியோகம்..

 



பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்துக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தினால், நாளாந்தம், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.


7 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் என இரண்டு கட்டங்களாக திணைக்கள ஊழியர்களை பணிக்கு அழைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அத்துடன், அடுத்த வருடம் முதல் அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்களில் கடவுச்சீட்டு வழங்குவதைப் போன்றே இத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post