கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்துக்கு 60 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று(10) காலை நடைபெற்றது.
6 தொடக்கம் 9 வகுப்பு வரையான மாணவர் பாராளுமன்றத்திற்கு 20 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 30 மாணவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
10 தொடக்கம் 11 வரையான மாணவர் பாராளுமன்றத்துக்கு 40 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 60 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
6 தொடக்கம் 9 வரையான வகுப்புகளுக்கான மாணவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான போட்டியில் அஷ்ரப் முஹம்மது அம்ஜாத் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் (63) பெற்று முதல் இடத்தையும் ரியாஸ் பாத்திமா அமீரா என்ற மாணவி 41 விருப்பு வாக்குகளைப் பெற்று 2 ஆம் இடத்தையும், சாபிக் முஹம்மது அயான் 40 வாக்குகளைப் பெற்று 3வது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
10 தொடக்கம் 13 வகுப்பு வரையான வகுப்புகளுக்கான மாணவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான போட்டியில் முகமது அலி முஹம்மது ஆதில் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் (56) பெற்று முதல் இடத்தையும் அப்துல் ஹாதி பாத்திமா ரீமா என்ற மாணவி 49 விருப்பு வாக்குகளை பெற்று 2 ஆம் இடத்தையும், முபீன் அஹமத் 39 வாக்குகளை பெற்று 3வது இடத்தையும் தட்டிக் கொண்டனர் கொண்டனர்.
அடுத்த வாரம் முதலாவது பாராளுமன்ற அமர்வு இடம் பெறவுள்ளது. இதன்போது சபாநாயகர், பிரதி சபாநாயகர், சபை முதல்வர், பிரதி சபை முதல்வர், பிரதிக் குழுக்களின் தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அதன் பின்னர் 10 அமைச்சர்கள்,10 பிரதியமைச்சர்கள், 10 தெரிவு செய்யப்படவுள்ளனர்.
பாராளுமன்ற நிறைவேற்று சபையின் செயலாளராக அதிபர் ஆர். சதாத், அபிவிருத்திக்கான பிரதி செயலாளராக எம். எம்.றுகையா(ஆசிரியை), நிர்வாகத்திற்கான பிரதி செயலாளராக எம். ஏ. எம். மௌஜுத், ( ஆசிரியர்) ஒழுக்க கட்டுப்பாட்டுக்கான பிரதி செயலாளராக எம். ரி. ஹஸ்னி பானு (ஆசிரியை) ஆகியோர்செயல்படவுள்ளனர் .






Post a Comment