திருகோணமலை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பாக கந்தளாய் லேக் பிரண்ட் ரெஸ்டில் இன்று (04) நடைபெற்ற “மனித உரிமைகள் மற்றும் சமூக ஊடகங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் செயலமர்வில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள் குழுவும் கலந்துகொண்டது.
இதன்போது மக்களின் மனித உரிமைப் போராட்டத்தில் ஊடகவியலாளர்களைப் பாதிக்கும் விடயங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
உரிமைகளுக்கான ஊடகவியலாளர்கள் குழுவின் உறுப்பினர் கே.சஞ்சீவ, சித்திரவதைக்கு எதிரான இலங்கை கூட்டமைப்பின் அழைப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர், அந்தோனி வினோத், சித்திரவதைக்கு எதிரான மனித உரிமைகள் நிலையத்தின் சட்டப் பிரிவின் தலைவர் சட்டத்தரணி லக்ஷான் பெர்னாண்டோ, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி அறக்கட்டளையின் தலைவர் சுரங்க ரூபசிங்க மற்றும் அறக்கட்டளையின் செயலாளர் சுனேத் ஆர்.விமலசிறி ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment