கண்டல் தாவரங்களை பேணிப்பாதுகாப்பதுடன் அதனை நட்டி பேணிப்பாதுகாப்பதன் மூலம் சுற்றாடலுக்கும் மனிதன் மற்றும் உயிரினங்களின் இருப்புக்கும் பல பிரதிபலன்கள் ஏற்படுவதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.
திருகோணமலை சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டபோதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கண்டல் தாவரங்கள் சூழலை பாதுகாப்பதுடன் அதிகமான ஒட்சிசனை சூழலுக்கு வெளிவிடுகின்றது. இதனால் மனிதன் உட்பட உயிரினங்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படுகின்றது.கடலரிப்பு போன்ற விடயங்களை தடுக்கவும் கண்டல் தாவரங்கள் ஏதுவாக அமைகின்றது. எனவே அத்தாவரங்களை பேணிப்பாதுகாத்து சூழல் சமநிலைக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்படல் அனைவரது பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது 500 கண்டல் தாவரங்கள் நடப்பட்டன.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பி. தனேஸ்வரன், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் முகாமைத்திணைக்களத்தின் பிரதேச பொறியியலாளர் எம். துளசிதாசன், திருகோணமலை நகரசபை செயலாளர், இலங்கை கடற்படை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment