(கியாஸ் ஷாபி)
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் ஜூலை 10ஆம் தேதி வரையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் பாடசாலை அதிபர்களுக்குமிடையே இன்று(28) நடைபெற்ற கலந்துரையாடலிலே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
சுகாதாரம் , துறைமுகம் , உணவு சேவை போக்குவரத்து உட்பட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே இன்று நள்ளிரவு முதல் ஜூலை 10ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என நேற்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது .
அத்தோடு, நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை 10 வரை மூடப்பட்டாலும் கிராமப்புற பாடசாலைகள் போக்குவரத்து வசதிகளுக்கேற்ப இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கந்தளாய் பிரதேசத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள் எரிபொருள் நெருக்கடியை சந்தித்து வருவதால், பாடசாலைகளை சீராக நடாத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இந்தக் கூட்டத்தில் அதிபர்கள் எடுத்துக் கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment