https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 அடுத்த ஷாபி நீங்களாக இருக்கலாம்!

அடுத்த ஷாபி நீங்களாக இருக்கலாம்!


 

பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். 


 "கருத்தடை செய்யப்பட்ட பெண்களா, அல்லது மலடாக்கப்பட்ட மூளைகளா? அல்லது சற்றும் கரிசனையில்லையா?


நேற்று டாக்டர். ஷாபி தொடர்பான பல பதிவுகளைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.


அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் ஏற்பட்ட துயரங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர் தடுப்புக்காவலில் இருந்தபோது தலையணைக்காக பாதி காலியான பிளாஸ்டிக் போத்தலைப் பயன்படுத்தியதாக சிங்களப் பத்திரிகை ஒன்றில் படித்தேன். அவரது குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயரங்கள் பாரிய அனர்த்தங்களை விட கொடியது.


டாக்டர் ஷாபி தனக்கு பெரும் தொல்லைகள் தந்து துன்பங்களை வாங்கித்தந்த மக்களின் நலன் கருதி தனது நிலுவைத் தொகையை நன்கொடையாக வழங்கியமை அவரது மகத்தான பெருந்தன்மையைக் காட்டுகிறது. தயாளகுணம் நிறைந்த அவரது வாழ்க்கை சரிதத்தை நாம் எளிதில் மறந்துவிடக் கூடாது.


இதனால் நாம் ஒரு தேசமாக தோல்வியடைந்து விட்டோம் என்ற கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு சக குடிமகன் நாட்டில் உள்ள அனைத்து சட்ட ஒழுங்களுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். அது தவறு என்று சுட்டிக் காட்ட யாரும் துணியவில்லை . எமது தொழில் துறை சார்ந்தவர்களாலும் அவர் கடுமையாக ஏமாற்றப்பட்டார். அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது மக்கள் அமைதி காத்தனர். பொதுமக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க தொழில் சங்கங்கள் முன் வந்திருக்க வேண்டும். ஆனால் எந்த விசாரணையும் துவங்க முன்பே ஷாபி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். போலியான அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரது சமூகமும் இழிவுபடுத்தப்பட்டது.


இறுதியாக காலத்தின் மாறா நியதியான "உண்மை வெல்லும்". என்ற வாக்கு வென்றது. துரதிஷ்டவசமாக, சுயநலத்திற்காக ஒரு மனிதனையும் அவனது குடும்ப கெளரவத்தையும் பேரழிவிற்கு உட்படுத்திய ‘தேசப்பற்றுள்ள வர்கள் என்று பீற்றிக் கொள்ளும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் எந்தப் பலனையும் காணவில்லை.


ஒரு தாய் மக்கள் என்று போற்றும் தேசமாக நின்று டாக்டர் ஷஃபிக்கும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் நாம் மன்னிப்புக் கேட்க வேண்டாமா?


குறைந்த பட்சம் இத்துயர நிகழ்வு கற்றுத் தந்த பாடத்தை இழந்து விடக்கூடாது. அநீதிக்கு எதிராக நிற்க நாம் கற்றுக் கொள்ளாத வரை, அடுத்த ஷாபி நானாகவோ அல்லது நீங்களாவோ இருக்கலாம்!!!

டாக்டர். ஹேமந்த சேனநாயக்க,

தலைவர்,

மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறை,  இலங்கை மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் கல்லூரி.

Post a Comment

Previous Post Next Post