https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிழக்கு மாகாண சுகாதார பரிசோதகர்களிற்காக மட்டக்களப்பில் இடம்பெற்ற பயிற்சி பட்டறை!!

கிழக்கு மாகாண சுகாதார பரிசோதகர்களிற்காக மட்டக்களப்பில் இடம்பெற்ற பயிற்சி பட்டறை!!



 






புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையானது கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர்களிற்கு பயிற்சி பட்டறையென்றினை மட்டக்களப்பில் இன்று நடாத்தியிருந்தது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனையின் பிரதான மண்டபத்தில் புகையிலை  மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சமதி ராஜபக்சே தலைமையில் இடம்பெற்ற குறித்த பயிற்சிப் பட்டறையின்போது

புகையிலையற்ற 362 வலயங்களை உருவாக்கப்படவுள்ளமை தொடர்பாக இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இந் நிகழ்வில்  கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு பிராந்திய சுகாதார பணிமனைகளில் இருந்து 100 சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.


இப்பயிற்சிப்பட்டறையில் மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி மோகனகுமார், மாகாண தொற்று நோய் வைத்தியதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.அருள்குமரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post