https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிழக்கு மாகாண பதிலீட்டு ஆசிரியர் இடமாற்றங்களை இடைநிறுத்துக!

கிழக்கு மாகாண பதிலீட்டு ஆசிரியர் இடமாற்றங்களை இடைநிறுத்துக!

 



தற்போதைய பொருளாதார நொருக்கடி சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் தவிர்ந்த அனைத்து இடமாற்றங்களையும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் எனஇலங்கை கல்விநிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்குமாகாண சங்கம் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளது.


இது தொடர்பாக மேற்படி சங்கச் செயலர்ஏ.எல்.எம்.முக்தார் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது

2021 ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் கிழக்கில் பதில் இடமாற்றம் என பெயரிடப்பட்ட இடமாற்றம் என்ற பெயரில் இடமாற்றம் ஒன்றை அமுல் நடாத்தி உள்ளது.


இந்த இடமாற்றம் வழமையாக நிபந்தனை காலம் குறிப்பிட்டு கடந்த காலங்களில் செய்யப்பட்டது. ஆகக்கூடியது இரு வருட காலம் என மட்டுபாபடுதாதப்பட்டது. ஆனால் இம்முறை இவ்வாறான நிபந்தனைக் காலம் குறிப்பிடப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்.


பெண் ஆசிரியைகள் பலர் பிரதான வீதியில் இருந்து 02 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கிராமப்புற பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் பொதுப்போக்குவரத்தற்ற பிரதேசங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அநீதியாகும்.


பஸ்களில் பயணம் செய்யும் ஆசிரியைகள் மீண்டும் முச்சக்கர வண்டிகளில் உட்பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும்.


இந்த நிலைமையில் சில ஆசிரியைகள் நாள்ஒன்றுக்கு 1200/- வை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாதமொன்றிற்கு பிரயாண செலவாக மட்டும் 24,000 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. இந்தநிலையில் ஒரு ஆசிரியை தமக்கு வழங்கப்படும் சம்பளத்தில் குடும்பம் நடாத்துவதற்கு 15,000 மட்டும் மீதியாக பெறவேண்டியுள்ள துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.


ஒரு அரச உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்படும் போது கவனத்தில் கொள்ளவேண்டிய அடிப்படை விதிமுறைகளைக் கவனத்தில் கொள்ளாது கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடந்து கொண்டதன் மூலம் மனிதாபிமானம் அற்ற செயற்பாடு இடம்பெற்றமை உறுதியாகிறது.


சில கல்வி வலயங்களில் மேலதிக ஆசிரியர்கள் உள்ள நிலையிலும் அங்கு ஆசிரயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதனை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.


தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரச ஊழியர்கள் பெரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.தமது நிலையை வெளியே சொல்லமுடியாது கௌரவ பிச்சைக்காரர்களாக மாறியுள்ளவிடயம் தெரியாததல்ல. எனவே மாகாண கல்வி திணைக்களம் குறித்த பதலீட்டு இடமாற்றங்களை நிலைமை சீரடையும் வரை இடைநிறுத்தி வைக்கவேண்டும்.

Post a Comment

Previous Post Next Post