சந்தேக நபர்களை தேடி பொலிசார் தீவிர சோதனை!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராம சேவகர் பிரிவில் இன்று (7)இரவு 6.30 மணி அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நஜிம்கான் வசிம் வயது 30, சாகுல் ஹமீத் முகம்மது ரமீஸ் ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானவர்களாவர்.
சந்தேக நபர்களை தேடி பொலிசார் நடுவூற்று, மகமாறு போன்ற பிரதேசங்களில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளை இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment