https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த ஆசிரியைக்கு கிண்ணியா பிரதேச ஆசிரியர்கள் நிதி உதவி.

போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த ஆசிரியைக்கு கிண்ணியா பிரதேச ஆசிரியர்கள் நிதி உதவி.




அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க கோரி கடந்த வருடம் தொடர்ச்சியாக பல மாதங்களாக நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது கலந்து கொண்டு உயிர் நீத்த தெனியாய ஆசிரியை வருனி அசங்க குடும்பத்துக்கு நேற்று(1) ஒரு தொகை நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

கிண்ணியா வலய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் அன்பளிப்பாக வழங்கிய இந்த நிதியை, மறைந்த ஆசிரியையின் தெனியாய வீடு தேடிச் சென்று, வழங்கிவைக்கப்பட்டது.

இதனை கிண்ணியா வலய அதிபர் சங்க தலைவர் எம்.எம்.முஸம்மில், சங்கச் செயலாளர் எஸ்.டி.நஜீம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதன்போது, கிண்ணியா வலய அதிபர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post