https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 முக்கியமான கூட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் கலந்து கொள்ளாதது ஏன் ?

முக்கியமான கூட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் கலந்து கொள்ளாதது ஏன் ?

 


கிண்ணியா பிரதேசத்தின் பல்வேறு தேவைகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட காணி பயன்பாட்டு முறை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று ((19) கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் ஏ. எம். அனஸ் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதை விளக்கி, கூட்டத்தை ஏற்பாடு செய்து கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா ஊடக அறிக்கை ஒன்றை இன்று(20) வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, நேற்று(19) இடம்பெற்ற"கிண்ணியா பொதுக் காணி பயன்பாடு"தொடர்பான கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச செயலாளர் கலந்து கொள்ளாமை தொடர்பாக சில கருத்துக்கள் வெளிக் கிளம்பியுள்ளது.

இந்த கலந்துரையாடலின் முழு ஆலோசனையையும் வழிகாட்டலையும் கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ள அவர் ஆர்வமாக இருந்த போதிலும் திருகோணமலை மாவட்ட செயலாளர் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றமையினால் அந்த பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதனால் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக அவர் கிண்ணியா சூறா சபையின் தலைவருக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் சார்பில் கிண்ணியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தரும் அக்கிளையின் பிரதம முகாமைத்துவ சேவையாளரும் கலந்து கொண்டனர்.

காணி தொடர்பான ஆவணங்களையும் அவர் தந்து உதவி இருந்தார்.

இந்நிகழ்வு முடிந்ததன் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து கொண்டதோடு எதிர்கால செயல்பாடு சம்பந்தமாகவும் கலந்துரையாடினார் என்ற என்ற விடயத்தை அனைவரின் கவனத்திற்கும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.









Post a Comment

Previous Post Next Post