https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் அரச பொதுக் காணி பயண்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

கிண்ணியாவில் அரச பொதுக் காணி பயண்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

கிண்ணியா பிரதேசத்தின் பல்வேறு தேவைகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட காணி பயன்பாட்டு முறை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்று நேற்று((19) கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா சூரா சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிண்ணியா நகரத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் , அரச நிறுவனங்களின் தேவைகளுக்காக காணிகளை இனங்காண்பதில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

பொதுமக்களின் தேவைகளுக்காக அரச காணிகளை ஒதுக்கீடு செய்வதிலும் அதனை அடையாளம் காண்பதிலும் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்ல அரச காணிகளை அடையாளப்படுத்தி ஒதுக்கீடு செய்வதன் அவசியம் பற்றியும் இங்கு பல தரப்பினரும் தமது கருத்துக்களை முன்வைத்தார்கள்.


குறிப்பாக தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் இடமாற்றமும் அதில் உள்ள பிரச்சினை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதோடு, கிண்ணியா கல்வி வலயத்திற்கு ஒதுக்கப்பட்ட கணனி வள நிலையத்திற்கான காணிகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், பொதுத் தேவைகளுக்காக காணிகளை அடையாளப்படுத்தி அதனை விரைவாக அந்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் மற்றும் காணிகளை அடையாளப்படுத்த முடியாத திணைக்களங்களுக்கு காணிகளை ஒதுக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.


அத்தோடு இடப்பற்றாக்குறை யாக இருக்கின்ற அரசு அலுவலகங்கள் தொடர்பாகவும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் நிறுவனங்கள் தொடர்பாகவும் இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான M.S.தெளபீக், இம்ரான் மகரூப், கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். நிவாஸ், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் எ. எஸ். நசீர் கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷெய்க் ஏ. எம்.ஹிதாயத்துல்லா கிண்ணியா பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எம்.எம்.முஹ்மீன், கிண்ணியா, மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரிகள், வெருகல் பிரதேச செயலாளர், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர், கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கிண்ணியா காணி உத்தியோகத்தர் மற்றும் அந்தக் கிளை சார்ந்தவர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.






Post a Comment

Previous Post Next Post