https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆளுநர் நடவடிக்கை.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆளுநர் நடவடிக்கை.




திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று(22) சனிக்கிழமை இடம்பெற்றது.



இதில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.



இதன்போது ஊடகவியலாளர்களின் குடும்பமொன்றிற்கு சுயதொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் ஆளுனர் தெரிவித்தார்.



இதன் முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலிருந்தும் தலா முப்பது பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டு சமூக சேவைகள் திணைக்களம் ஊடாக இவ் சுய தொழில் நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்படுமெனவும் கிழக்கு மாகாண ஆளுனர் இதன் போது தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post