அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 14 வயது பிரிவுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான சமபோஷா உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியன் கிண்ணத்தை கிண்ணியா மத்திய கல்லூரி அணி சுவிகரித்து, 2023 ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளது.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டி, நேற்று(30) கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கொழும்பு சாஹிரா கல்லூரியை எதிர்த்தாடிய கிண்ணியா மத்திய கல்லூரி அணி 1 : 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று, தேசிய மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
இந்த வருடத்தோடு, கிண்ணியா மத்திய கல்லூரி அணி தொடர்ச்சியாக மூன்று தடவைகள் 14 வயது பிரிவுக்கான சமபோஷா சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி, தேசியமட்ட சம்பியன் ஆனமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment