அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் 73 வது வருடாந்த தேசிய மாநாடு கடந்த 24ஆம் திகதி வை.எம்.எம்.ஏ. தேசியத் தலைவர் இஹ்சான் ஹமிட் தலைமையில் பதுளையில் நடைபெற்றது.
இதன்போது, கிண்ணியா பிரதேசத்திற்கான புதிய தலைவராக A .H.M. இன்சாத் மற்றும் செயலாளராக A.S.M நவாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும், திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகமம் பிரதேச இளைஞர் பேரவை, YMMA இன் இரு சிறப்பு விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தலைவருக்கான சிறப்பு விருதினை ஏ.எச்.எம்.சித்தீக்கும் செயலாளருக்கான சிறப்பு விருதினை எம்.பீ.பைஸரும் பெற்றுக்கொண்டனர்.
இந்த மாநாட்டில், பிரதம அதிதியாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சிறப்பு அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் எம்.எம். முக்தார், மாவட்டத்தின் YMMA செயற்பாட்டாளர்களை மிகச் சிறப்பான முறையில் வழிநடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment