https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் சுனனுத் திர்மிதி பாராயன நிகழ்வு ஆரம்பம்.

கிண்ணியாவில் சுனனுத் திர்மிதி பாராயன நிகழ்வு ஆரம்பம்.


கிண்ணியாவில் சுனனுத் திர்மிதி சங்கம் ஏற்பாடு செய்துள்ள 23 வது வருட சுனனுத் திர்மிதி பாராயன நிகழ்வு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


நபிகள் நாயகம் முகம்மது நபியவர்களின் சொல், செயல் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுனனுத் திர்மிதி கிரந்தம் தினமும் காலை சுபஹ் தொழுகைக்கு பின்னரும், மாலை மஃரிப் தொழுகைக்குப் பின்னரும் பாராயனம் செய்யப்பட்டு வருகின்றது. பல உலமாக்கள் இதில் பங்களிப்புச் செய்து வருகின்றனர்.


இதன் இறுதி தமாம் வைபவம் ஜூன் மாதம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது.


நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி என்பன காரணமாக 2020, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் இந்த வைபவம் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது





Post a Comment

Previous Post Next Post