தேசிய மக்கள் சக்தியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று, கிண்ணியா பேருந்து நிலையத்துக்கு முன்பாக நேற்று(11) காலை 10 மணி அளவில் இடம்பெற்றது.
மின்சாரம், நீர், சமையல் எரிவாயு மற்றும் உணவுகளின் விலைகளை அதிகரித்து மக்களை வதைக்கும் அரசாங்கத்தை விரட்டி அடிக்கவும் தேர்தல் மூலம் அரசாங்கத்தை மாற்றி அமைக்கவுமே குறித்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர உட்பட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





Post a Comment