இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிண்ணியாவில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்வில், சுதந்திர தின சொற்பொழிவு, சிரமதானம், மரம் நடுகை, ஏழைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகம், கிரிக்கெட் சுற்று போட்டி போன்றன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கிண்ணியா ஜமாத்தில் உலமா சபை தலைவர், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, கிண்ணியா மஜ்லிஸ் அஷ் சூராதலைவர், ஆலங்கேணி குருக்கள், உதவி பிரதேச செயலாளர் உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment