நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இறுதிக்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று 20 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனவரி 23ஆம் தேதி கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி பெப்ரூவரி 17ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இதனையொட்டி, ஜனவரி 20 ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகி மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையுள்ளன. முஸ்லிம் பாடசாலைகளில் மார்ச் மாதம் 21 ஆம் திகதியுடன் கல்வி நடவடிக்கைகள் யாவும் நிறைவடைகின்றன.
இதன் அடிப்படையில், 2022 ஆம் ஆண்டின் இறுதித் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, அரசாங்க பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான சகல கல்வி நடவடிக்கைகளும் 27.03.2023 ஆரம்பமாகி, மொத்தம் 175 நாட்கள் பாடசாலைகள் நடைபெற வேண்டுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முதலாம் தவணை 27.03.2023 தொடக்கம் 20.07.2023 வரையும் 61 நாட்களும், இரண்டாம் தவணை 24.07.2023 தொடக்கம் 13.10.2023 வரையும் 56 நாட்களும் மூன்றாம் தவணை 14.11.2023 தொடக்கம் 09.02.2024 வரையும் 58 நாட்களும் பாடசாலைகள் நடைபெறவுள்ளன.

Post a Comment