பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக சுதந்திரப் பத்திரிகையாளர் இயக்கம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்று நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில், திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் ஆகிய கலந்து கொண்டன.
இதன் போது, பிராந்திய ஊடகவியலாளர்களைப் பாதிக்கும் நேரடிப் மற்றும் மறைமுகமான பல்வேறு பிரச்சனைகள் பிராந்திய ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டன.
சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் லசந்த டி சில்வா இதன் போது கருத்து தெரிவிக்கையில்,
புதிய ஊடகங்களின் தோற்றத்தினாலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தினாலும் எதிர்காலத்தில் ஒரு பிராந்திய ஊடக தலைமுறையை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும், தற்போதைய பிராந்திய ஊடகவியலாளர்களே கடைசி தலைமுறைகாக இருக்கலாம்.
இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்காக எதிர்காலத்தில் சுதந்திர ஊடக இயக்கம் தொழிற்சங்கப் பிரிவை ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதற்காக கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுதந்திர ஊடக இயக்கத்தின் வெளிகள இணைப்பாளர் பிரியஞ்சித் அலோக பண்டார, உதவி இணைப்பாளர் , செயற்குழு உறுப்பினர் பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.





Post a Comment