https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 திருகோணமலையில் நல்லிணக்க சமாதான செயலமர்வு

திருகோணமலையில் நல்லிணக்க சமாதான செயலமர்வு



 
திருகோணமலையில் இனங்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கில் நல்லிணக்க சமாதான செயற்திட்ட செயலமர்வொன்று நேற்று (18) கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

 


ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் கிண்ணியா சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சிவில் சமூக அமைப்புகளின் திறன் விருத்தியை மேம்படுத்தும் நோக்குடன் இது நடைபெற்றது. 


இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலாளர் B. H. N. ஜயவிக்ரம, மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அத்தநாயக்க, நிறுவனத்தின் தலைவர் ரஸீனா, பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷிக் அலாப்தீன் மற்றும் சிவில் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் வளவாளராக சுஜீவன் சித்ரவேல், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post