https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் நியமனம்.!

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் நியமனம்.!



ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி பதில் ஜனாதிபதி நியமித்துள்ளார்.


நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான திருமதி. மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.


15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக திருமதி. மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் கொழும்பு பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post