https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவுக்கான காதி நியமனம் எப்போது?

கிண்ணியாவுக்கான காதி நியமனம் எப்போது?



காதி நீதவான் நியமனத்தை துரிதப்படுத்துமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை கிண்ணியா சூரா சபை கோரியுள்ளது...


இலங்கையில் முஸ்லிம்களின் விவாக விவாகரத்து தாபரிப்பு விடயங்கள் காதி நீதிமன்றங்களில் ஊடாகவே இடம்பெற்று வருகின்றது.


கிண்ணியா பிரதேசத்தில் சுமார் இருபத்திநான்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த முஸ்லிம் குடும்பங்களின் குடும்ப பிணக்குகளை

தீர்த்துக் கொள்வதற்கு நீண்டகாலமாக வெற்றிடமாக உள்ள காதி நீதவான் நிரந்தரமாக நியமிக்கப்க்கப்படவில்லை.

பதில் காதி நீதவான் ஒருவரே தற்பொழுது சிரமங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்.


"ஒரே நாடு ஒரே சட்டம்" என்னும் கோட்பாட்டின் கீழ் முஸ்லிம்களின் விவாகரத்து சட்டமானது திருத்தப்படும் என்று பல காலமாக கூறப்பட்ட போதிலும் அந்த நிலைமையிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.


எனவே மேற் குறித்த விடயங்களை கவனத்தில் கொண்டு கிண்ணியா பிரதேசத்திற்கான காதி நீதிபதி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழவைகிண்ணியா சூரா சபை கேட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post