https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 லொறி வீட்டுக்குள் புகுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!

லொறி வீட்டுக்குள் புகுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!



திருகோணமலை கண்டி வீதி 91 வது மைல் கல்லில் லொறியொன்று பாதையை விட்டு விலகி, விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.




இந்த விபத்தில், லொறி அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்து நித்திரையில் இருந்த இரண்டு சிறுவர்களுக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தி உள்ளது.




காயமடைந்த இரு சிறுவர்களும் கந்தளாய் தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த விபத்துச் சம்பவம் நேற்று(4) அதிகாலை 3.00மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


திருகோணமலையிலிருந்து தம்புள்ளை பகுதிக்குச் சென்ற லொறியொன்றே, இவ்வாறு விபத்துக்குள்ளானது.


இந்த லோறி, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றை மோதி வீடொன்றினுள் புகுந்துள்ளதாகவும், இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்



சாரதியின் நித்திரை மயக்கமும், அதிக வேகமுமே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post