அரச ஊழியர்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அமல்படுத்துவதற்கு ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகி நிதி நிறுவனங்களிலிருந்து பெருமளவு நிதியை பெற்றுக் கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில்,
1.வைத்தியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், கல்வி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பாதுகாப்புத்துறை ஆகிய நியமனங்களை தவிர வேறு நியமனங்கள் ஏதும் அடுத்த பத்து வருடங்களுக்கு வழங்குவதில்லை.
2.அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை 57 ஆக மட்டுப்படுத்தல்.
3. 2021 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 65 ஆக அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றத்தைக் கொண்டுவரல்.
4.அந்த திட்டத்தின் கீழ், தற்போது 60 வயதைத் தாண்டி, தொடர்ச்சியாக பணியில் இருப்பவர்களை 65 வரையும் அனுமதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
5. அவ்வாறு 60 வயதைத் தாண்டி தொடர்ச்சியா பணியில் இருப்பவர்களுக்கு, 65 வயதுவரை சந்தர்ப்பம் அளிக்கப்பட்டாலும், வருடாந்த சம்பள உயர்வு வழங்குவதா? இல்லையா? என்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றது. சிலவேளை வருடாந்த சம்பள உயர்வின்றி இவர்கள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டியும் வரலாம்.
6. தற்போது 57 வயதைத் தாண்டி வேலை செய்கின்றவர்கள், 60 வயது வரை சந்தர்ப்பம் அளிக்கப்படலாம்.
7. இதுவரை 57 வயதை எட்டாத அரச ஊழியர்களுக்கு கட்டாயம் ஐம்பத்தி ஏழு வயதில் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்படலாம்.
8.தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையான வருமானம் பெறும் அரச ஊழியர்களுக்கு அடுத்த வருட வரவுசெலவுத்திட்டம் வரும்வரை எதுவித நிவாரணங்களும் வழங்குவதில்லை.
6. அரசு ஊழியர்கள் வெளிநாடு சென்று உழைப்பதற்கு தூண்டும் வகையில், சம்பளமற்ற விடுமுறையில் நெகிழ்வு போக்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
7. வீட்டுத் தோட்ட பயிர் செய்கையில் அரச ஊழியர்களை ஊக்கப்படுத்தும் பல திட்டங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment