2022 ஜூன் 27 முதல் 2022 ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை பின்வருமாறு நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது...
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து சிரமங்கள் இல்லாத கிராமப்புற பாடசாலைகளில், கடந்த வாரம் ஜூன் 20 - ஜூன் 27 வரை பாடசாலைகள் இடம்பெற்றது போல் வழக்கம் போல் பாடசாலைகளை நடாத்த வேண்டும் என்பதுடன், குறித்த பாடசாலைகளில் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்குகின்ற ஆசிரியர்களுக்கு, அவர்களது தனிப்பட்ட விடுமுறைகளிலிருந்து விடுவிப்பதுடன், நெகிழ்வான அட்டவணையை தயாரித்தல்.
நகர்ப்புறங்களில் கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகள், இவ்வாரத்தில் 3 நாட்கள், அதாவது செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை நடாத்தப்பட வேண்டும்.
இப்பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் எத்தனை நாட்கள் நடாத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. (மாணவர்கள் வருகை தராத நாட்களில் ஒன்லைன் கற்பித்தல் /பணிகளை வழங்குதல் /வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளை தொடருதல்.)
போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு இந்நாட்களை தனிப்பட்ட விடுமுறையாக கருதாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூன் 20 - 24 வரை போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலைகளை நடாத்துவதற்கு பங்களித்த அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, கல்வி அமைச்சு தலைவணங்குகிறது

Post a Comment