https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 திருகோணமலையில் விபத்து ; சாரதி பலி!

திருகோணமலையில் விபத்து ; சாரதி பலி!



திருகோணமலை கண்டி பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவ்விபத்துச் சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் முகம்மட் நிசார் (40) வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



ஹதரஸ்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே கந்தளாயிலிருந்து தம்புள்ள சென்ற வேனும், அனுராதபுரத்திலிருந்து திருகோணமலைக்கு உமி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியுமே இவ்வாறு நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post