https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

 



அட்டுலுகமயில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


29 வயதான சந்தேக நபர் மேற்படி குற்றச்செயலை தானே செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, மேற்படி சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் பாத்திமா ஆயிஷா எனும் 9 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை காலை காணாமல் போயிருந்தாள். மறுநாள் அவள் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தாள்.

Post a Comment

Previous Post Next Post