https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 வாகன விபத்து; ஒருவர் மரணம்! இருவர் படுகாயம்

வாகன விபத்து; ஒருவர் மரணம்! இருவர் படுகாயம்

  



யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற  வான் ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் திருமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கிளபென்பேர்க் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்த கனரக வாகனமும் கிண்ணியா பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனமுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரத்னகலாவதி (72வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post