https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 முஸ்லிம் தலைமைத்துவமும் பொதுவெளி நாகரீகமும்

முஸ்லிம் தலைமைத்துவமும் பொதுவெளி நாகரீகமும்

 

இன்று நாடு இருக்கின்ற நிலையில் இன, மத வேறுபாடுகளுக்கப்பால் அனைத்து மக்களும் அரசுக்கெதிராக மிகவும் ஆத்திரப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். தங்களது எதிர்ப்புக்களை அரசியல் ரீதியாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் நமது தலைவர்களும் பங்கேற்கதில், கருத்துக்களை வெளியிடுவதில் தவறேதும் இல்லை. ஆனால பொதுவெளி நாகரீகம் என்ற ஒன்று இருக்கின்றது.

கடந்த 52 நாள் சதிப்புரட்சியின்போது கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் நடைபெற்ற ஐ தே க தலைமையிலான கூட்டங்களில் மைத்திரிக்கு சவால் விட்ட விதமும் மேடைகளில் மேலும் கீழும் துள்ளிக்குதித்து நடந்துகொண்ட விதமும் மிகவும் அநாகரீகமாக இருந்ததை அப்போதே சுட்டிக்காட்டியிருந்தேன்.

அன்று பேரினவாதத்தின் வெறுப்பு நம்மீது வளர்வதற்கு நமது தலைவர்களின் செயற்பாடுகளும் பங்களிப்புச் செய்தன; அதுவே இனவாத்த்தின் முழுமையான அடிப்படை இல்லாதபோதும்கூட, என்பதும் உண்மையாகும். 

அந்த செயற்பாடுகளுள் இந்த தலைவர்கள் அன்று மேடைகளில் போட்ட இந்த அநாகரீக துள்ளலும் ஒன்றாகும்.

தயவுசெய்து சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கவேண்டும். அன்று மஹிந்த பெரும்பான்மை சமூகத்தின் கணிசமான ஆதரவைப்பெற்றவராக இருந்தார். சட்டரீதியாக ரணிலின் பக்கம் நியாயமிருந்தது. நாமும் ஆதரித்தோம். அதில் தவறில்லை. ஆனால் ஏனைய தலைவர்களே அவ்வாறான சவாலை விடமுன் நாம் “ ஜனாதிபதித் தேர்தலை நடத்தமுடியுமா?” என்று மைத்திரிக்கு சவால்விட்டு மேடைகளில் துள்ளினோம். அந்தக் கால்கள் உயர்ந்து பணிந்த காட்சிகள் இப்போதும் கண்முன் நிழலாடுகின்றன. ஏற்கனவே, முஸ்லிம்கள் மீது வெறுப்பிலிருந்த பேரின வாதிகளுக்கு மேலும் வெறுப்பைத் தூண்டாதா? 

இவ்வாறு செய்வதற்கான தேவை என்ன? நாமும் அந்தக் கூட்டங்களுக்கு சென்று பேசுவதில் தவறில்லை. ஆனால் உச்சாப்பு மிகுதியில் பொது நாகரீக எல்லைக்கப்பால் மற்றவர் எல்லோரையும் மீறி நாம் மட்டும் overdo பண்ணுவது நாகரீகமல்ல; என்பது மட்டுமல்ல, அது சமூகத்தின்மீது எதிர்மறையான தாக்கத்தை செலுத்தவல்லது.

அதேபோன்றுதான் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் போனதும் தவறு இல்லை. அங்கு பேசுவதும் தவறு இல்லை. உற்சாப்பு மிகுதியில் பொது நாகரீக எல்லையை மீறலாமா? அது அருவருப்பு இல்லையா? அங்கு வந்த வேறு எந்தத்தத் தலைவரும் இப்படி அசிங்கமாக பல்லைக்கடித்தார்களா?

இப்பொழுது, இனவாதம் மறக்கடிக்கப்பட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒற்றுமை வளர்ந்து வருகிறது. அதற்காக  இனவாதிகளே இல்லை; என்பதல்ல. இவற்றைப் பார்க்கின்றபோது அவர்களுக்கு வேக்காடு அதிகரிக்கும்.

இவ்வாறு பல்லைக்கடித்து அசிங்கமாக பேச என்ன தேவை? ஏனைய தலைவர்கள் அவ்வாறு பேசினார்களா? நமக்குமட்டும் ஏன் இந்த உச்சாப்பு மடத்தனம்?

அதேநேரம்; கண்ணிருந்தும் பார்க்கமுடியாத, காதிருந்தும் கேட்கமுடியாத தலைமைத்துவ விசுவாசிகள் என்பவர்கள்தான் இன்று சமூகத்தின் முதல் எதிரிகளாக இருக்கிறார்கள்.

தலைவன் எது செய்தாலும் சரியென வக்காலத்து வாங்குவதும் தன் தலைவனின் பிழையை யாரும் சுட்டிக்காட்டுவிடக்கூடாது. அதன்மூலம் அத்தலைவன் திருந்திவிடக்கூடாது. என் தலைவன் எத்துணை பிழை செய்தாலும் அதைச்சுட்டிக்காட்டிவிடக்கூடாது; என்று அலையும் கண்ணுள்ள குருடர்களும் காதுள்ள செவிடர்களும் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு நிறையவே பங்களிப்பு செய்துவிட்டார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, நாம் திருந்த வேண்டும். நல்லது செய்தால் பாராட்டுவோம். அதன்மூலம் அவர்களை உற்சாகப்படுத்துவோம். தவறு செய்யும்போது அவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்த முற்படுவோம். உற்சாப்பு மடத்தனம் 52 நாளின்போது கண்டோம். ஆனால் அது இன்னும் தொடரமுடியாது. சிலவேளை, அது நம் சமூகத்தை பேராபத்தில் தற்ளிவிடலாம்.

-சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீது-

Post a Comment

Previous Post Next Post