![]() |
( கியாஸ் ஷாபி )
அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற இருக்கின்ற பிரதி சபாநாயகர் தெரிவின் போது, கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு, தலைவர் றவூப் ஹக்கீமின் தீர்மானத்திற்கமைவாக வாக்களிக்கப் போவதாக திருகோணமலை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தினை இன்று (17)அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதேவேளை, பொது ஜன பெரமுன அரசுக்கு தான் இது காலம் வரைக்கும் வழங்கி வந்த ஆதரவை விலகிக்கொள்வதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
20வது அரசியலமைப்புத் திருத்தம், பெசில் ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட நிதி சம்மந்தப்பட்ட ஒரு பிரேரணை மற்றும் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு ஆகியவற்றுக்கு தான் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாகும் ஆனால் இனிவரும் காலங்களில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்ற எந்த பிரேரணைக்கும் ஆதரவாக வாக்களிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment