https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கிண்ணியாவில் வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

கிண்ணியாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயரிழந்தவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராகக் கடமையாற்றி வந்த ரஞ்சுதன் ஜோதிமணி வயது 43 என பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் திருகோணமலை - மட்டக்களப்பு பிரான வீதி, உப்பாற்று சிறுவர் பூங்காவிற்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

மூதுார் இறால் குழியைச் சேர்ந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

சம்பவ தினம் இன்று மாலை மூதுார் இறால் குழியிலிருந்து திருகோணமலை நோக்கி ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலாப் பயணபஸ் வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து இடம்பெற்றுள்ளது

ஸ்கூட்டிமோட்டார் சைக்கிளில் சென்றவர் ஸ்தலத்திலேயே பலியானார்

இச்சம்பவம் தொடர்பான மேலதிகமான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post